அன்ரிசர்வ்
அனைவரும் ஒருமுறையாவது (நெடும்)பயணமாக இந்திய ரயில்வேயில் அன் ரிசர்வில் பயணிக்க வேண்டும்.உண்மையில் என் இந்திய தேசத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும்,மனித உணர்வுகளையும், அதைவிட சிறப்பாக விவரிக்க முடியாது.சென்ற வாரம் அப்படி ஒரு ஐந்து மணி நேரப் பயணமாக திருச்சியில் இருந்து நாகூர் செல்ல வேண்டிய வாய்ப்பு கிட்டியது.முன் பதிவு செய்து டிக்கட் கிடைக்காமல் பயணம் செய்பவர்கள்,பஸ் கட்டணத்தை கணக்குப் பார்த்து அன் ரிசர்வில் பயணிப்பவர்கள்,தன் குழந்தைகளை ஒருமுறையாவது ரயிலில் அழைத்து செல்ல வேண்டும் என்று பயணித்தவர்கள்,என்னைப்போல் திடீர் பயணம் மேற்கொள்பவர்கள் இப்படி பல முகங்களோடு பயணித்த அனுபவம்.விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு செல்லும் பையன்,அழைத்து செல்லும் அப்பா (அம்மா ஏனோ வரவில்லை ), தாயுமானவனாய் தந்தை..பல வாடிய முகங்கள் காட்டிக்கொடுத்தது... வாங்கிய கடன் அடைக்க திணரிக்கொண்டிருப்பதை.. வேட்டி அணிந்த ஹிட்லர்கள் யூதர்கள் போல் மனைவிமார்கள் .முதலில் வந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் ஜன்னல் ஓர இருக்கை.ரயில் சிநேகமாய் பரிமாறிக்கொள்ளப்பட்ட பெருசுகளின் தினத்தந்தி பேப்பரும்,இளசுகளின் கடைக்கண் பார்வைகளும், தனது economic status ஐ காட்ட அணைவர் முன்னும் samsung tablet ல் பாட்டு கேட்டு, கேம் விளையாடும் முகங்கள் ,அதை ஏக்கத்தோடு பார்க்கும் முகங்கள்.ஓங்கி ஒலிக்கும் ரயில் ஓசையை, தாண்டி கேட்கும் சைனா போன் பாடல்கள் ...பெயர் தெரியாத முகங்களை முறை சொல்லி உறவாக்கிய குழந்தைகள்..ஒற்றை கேபினுக்குள் கொட்டிக்கிடந்தது 'இந்திய'ஒருமைப்பாடு...
இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தது இறங்கினேன்... எந்த சலனமும் இன்றி இறங்கிக் கொண்டிருந்தார்கள் முதல் வகுப்பு ஏ.சி கோச்சில் பயணம் செய்தவர்கள்.....