அக்டோபர் - 9 சே குவேரா - நினைவு தினம் இன்று

அக்டோபர் - 9 : சே குவேரா - நினைவு தினம் இன்று!
சே குவேரா – சில குறிப்புகள்
• பிறப்பு – 1929 ஜூன் மாதம் 14ம் தேதி.
• 1945 – மருத்துவ மேற்படிப்பு
• 1950 – மோட்டார்சைக்கிளில் 3000 மைல் தூரம் அர்ஜெண்டைனா முழுவதும் சுற்றுப்பயணம் ஆரம்பம்
• 1952 – தனது ப்ரியமான நண்பன் ஆல்பர்டோ கிரனட்டொவுடன் பெரு, கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு கடும் பயணம் செய்தார். தொழுநோயாளிகள் குடியிருப்பில் சேவை செய்து அங்கு பணிபுரிந்தார்.
• 1953 ஜூன் 12 – மருத்துவர் பட்டம் பெற்றார்
• 1953 ஜூலை 6, லத்தீன் அமெரிக்க பயணத்தை தொடங்குகிறார்.
• பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு ராணுவத்தால் சே கைது செய்யப்பட்டு பொலிவிய ராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னும் இடத்தில் அக்டோபர் 9ம் தேதி 1967 ஆண்டு சே கொல்லப்பட்டார்.
.
.
*''கோழைகளே... என்னைச் சுடுங்கள்.. உங்களால் ஒரு மனிதனைத் தான் கொல்ல முடியும். ஒரு புரட்சிக்காரனை அல்ல...!''
*சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை
என் பின்னால் வரும் தோழர்கள் என்
துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள்
தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்!
*''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்”
--- எர்னஸ்ட் சேகுவேரா
.
.
.
கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா?
''ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். நாங்கள் 'சே'வைப் போல இருப்போம்!''

எழுதியவர் : (9-Oct-14, 12:37 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 156

மேலே