மகனுக்காக பிறந்த நாள் வாழ்த்து
தங்க தாமரையே
தரணியாள பிறந்தவனே
கல்லமில்லா உன் முகத்தை
கண்ட நாள் இந்நாளே.
கண்ணை இமை காப்பதுபோல்
உன்னை அவள்காத்து புவியில்
உன் காலடி பதிக்க வைத்ததும்
இந்நாளே.
என்னை வளர்தது போல்
உன்னை வளர்க்கவும்
உன்னை போல் ஒருவன்
இல்லை இவ்வுலகில் என் கனவினை நினைவாகியதும்
இந்நாளே.
ஏழ்மையில் இருந்த போதும்
எம்பசியை பாராமல்
உம்பசிக்காக உண்டு உனை
உலகிற்கு அழித்ததும்
இந்நாளே.
எத்தனை துன்பம் இருந்த போதும்
அத்தனையும் மறந்து உன்னை
அழகாக அறிவாக பெற
அவள் சிரித்து சிரித்து வாழ்ந்து
சிறப்பாய் ஈன்றதும்
இந்நாளே.
கற்புகரசி என் காதல்
இளவரசி உனைபெற கதறிக்கதறி என் கண்முன்னெ அழுததும் இந்நாளே.
எப்பிறவி எடுத்தாலும்
இப்பிறவி போல் உயர்ந்தது இல்லை
இப்பிறவியில் அகிலத்தை காத்திடவும் அறவழி நடந்திடவும்
அன்புகொண்டு அனைவரையும்
அரவணைத்து வாழ்திடவும்
அப்பா உனக்கு அறிவுறுத்துகிறென்
இந்நாளில்.
(என் மகன் பிறந்த நாள் இன்று)