நடப்புவாழ்வில் நட்பு
தவிர்க்க இயலாத விபத்துகளாய்
நிகழ்ந்துவிடுகிறது
நம்மிடையே சிறு இடைவெளி..!
காரணங்களை கடந்த காலத்தில்
தேடி புறப்பட்ட
நமது சிந்தனைகள்
மீண்டு வரவேயில்லை..
பாதிப்புகளை குறைக்கவெண்ணி
பரிகாசித்து கொள்கிறோம்
ஒருவரையொருவர்
வார்த்தைகளை கொண்டு ..!
இனியொன்று நிகழாதிருக்க
இயல்பாய் இருக்க
பழகி கொள்கிறோம்
எள்ளி நகையாடி ஏமாற்றி
நம்மை நகர்த்தி செல்கிறது
நாளை வரவிருக்கும்
நம் எதிர்காலம்..!