ஆழத்தில் குதிக்கும் குழந்தையே - இராஜ்குமார்

ஆழத்தில் குதிக்கும் குழந்தையே
==============================
எந்தன் கண்ணருகே
கலங்கி நிற்கும்
துளியில் துன்பமில்லை
ஒளிகதிராய் கண்ணின்
ஓரத்தில் ஓங்கி அறைந்து
ஒரு முறை ரசிக்கிறாய்
எந்தன் நெஞ்சருகே
உயிராய் துடிக்கும்
துடிப்பில் ஏதுமில்லை
உயிர்வளியாய் நெஞ்சின்
ஆழத்தில் நீயே குதித்து
பல முறை வதைக்கிறாய்
- இராஜ்குமார்
நாள் ; 30 - 11 - 12