விழி வலி
பிரிந்துதான்விட்டோம்,
என்றபோதும்,
உன் அவலநிலை கேள்விப்பட்டு,
இந்த இரவில்,
உன் வலிக்காக அழுகிறேன் !
விழிமூடி மௌனமாய்,
இங்கே நான்விடும் பெருமூச்சு,
கண்டிப்பாய் வந்தடையாது உன் வாசலை !
அலைவரிசைகள் அற்றுப்போய்விட்டதால் !
நிஜத்தில் இன்று யாரோதானே இவன் உனக்கு !!