கனவே கனவே கலைவதேனோ

படம்: டேவிட்
பாடல் : கனவே கனவே கலைவதேனோ

இசைக்கு என் புதிய வரிகள்..


இடையில் வந்து
இதங்கள் கூட்டி
இறக்கச் சொன்னால் ஞாயமா..

கண்கள் வருடி
கனவில் வந்து
பார்வை பறித்தால் ஞாயமா..

உன்னை நினைக்கிறேன்
உறக்கம் தொலைக்கிறேன்
உயிரை பிரிந்தும்..வாழ்கிறேன்

உலகம் மறக்கிறேன்
உயர பறக்கிறேன்
உன்னை நினைத்தே.. வீழ்கிறேன்

பார்வை கொடுத்து
பார்க்கும் முன்னே
பறித்து போனால்
நியாயமில்லை..

இவளை நினைத்து
இதயம் துடித்து
இனியும் வாழ
தேவையில்லை

கண்கள் நனையக்
காண்கிறேன்
நாம் நடந்த பாதையில்
நடக்கிறேன்

தனிமையும்
என் தவிப்பையும்
தேடி தேடி போகிறேன்

என்னை நம்ப
மறக்கிறேன்
என் உயிரும் நீயென
நினைக்கிறேன்

உறக்கம் தெளிந்து
விழிகள் திறந்தும்
கனவில் இன்னும் மிதக்கிறேன்

பகல் சாய்ந்த பின்
விழி மூடுமா,
துயில் நீங்கியே
துணை தேடவா..

பார்வை கொடுத்து
பார்க்கும் முன்னே
பறித்து போனால்
நியாயமில்லை..

இவளை நினைத்து
இதயம் துடித்து
இனியும் வாழ
தேவையில்லை

எழுதியவர் : பிரதீப் (11-Oct-14, 11:26 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 468

மேலே