காதல் தனிமையில்

விடியாத இரவுகள்
நீயே தந்தாய்
வடியாத கண்ணீரும்
நீயே தந்தாய்

அழுதிடும் இன்பம்
உணர வைத்தாய்
சிரிக்கின்ற சோகம்
புரிய வைத்தாய்

இதயத்தை
கிள்ளி சென்றாய்
உறக்கத்தை
உன் விழியில்
அள்ளி சென்றாய்

என்னையே
எனக்குள்-மாற்றி
வைத்தாய்
உதிரத்தில்
உன்னினைவை-ஊற்றி
வைத்தாய்

எப்போது வரும்
என் நிலவு
மீண்டு வருமோ
என் கனவு

இந்நிலை
மாறுமோ
என் தனிமை
தீருமோ

கையோடு
சேருமோ
கனவுகள்-நிறை
வேறுமோ

உன் அன்பில்
என்னை
நனைத்துவிடு
முடியாதெனில்
போதும் வாழ்க்கை
முடித்துவிடு

என் மௌனத்தை
கொஞ்சம்
உடைத்துவிடு
இல்லையொரு
கல்லறையில்
என்னை
அடைத்துவிடு

என் நிழல்பட்டு
நீரெல்லாம்
எரியுதடி
எரியும் நெருப்பில்
உன் முகம்
தெரியுதடி

எழுதியவர் : அலைகள் (12-Oct-14, 7:31 am)
Tanglish : kaadhal thanimayil
பார்வை : 101

மேலே