காதலின் கலாச்சாரம்
உதட்டில்
உதடு பதித்து
உணர்வுகளை கிளறாது
முகத்தைப்பார்த்து
முழுமையடையும்....
அகத்தில் இருந்து
அள்ளி வீசும்
அன்பு நறுமணத்தால்!
அங்கத்தில்
ஆசை வைத்து
அசிங்கங்கள் செய்யாது
தகரமாக இருந்தாலும்
தரத்தில் குறையாது
நிறத்தில் கரையாது
நிஜத்தில் மறையாது!
காதல் வஞ்சகமற்றது
காசு பணத்திற்கு
கை நீட்டாது
உயர்வு தாழ்வு
உருவாக்காது
சமத்துவத்தில் இருந்து
சறுக்கி விடாது
திண்மையாக இருந்து
தியாங்கள் புரிந்து
தியாகிகளின் பிறப்பிடமாகும்
காதலின் இருப்பிடம்