மாறாத் தமிழன்
உரிமைக்கு குரல் கொடுப்போம்
உணர்வுக்கு மதிப்பளிப்போம்
உறுதிக்கு வாக்களிப்போம்
உதவிக்கு கை கொடுப்போம்
பதவிக்கு கரம் குவிப்போம்
பட்டத்திற்கு பரிசு அளிப்போம்
நன்மைக்கு முன் நிற்போம்
நட்புக்கு நம்மைத் தருவோம்
இந்தியத் தமிழன் கொள்கை இது
இதை நிறைவேற்றக் காலம் எது
வார்த்தையில் வருவது கொள்கையல்ல
செயலில் தருவதே கொள்கை
தமிழா உந்தன் மானமிது
உயர்வுடன் வாழும் கொள்கை இது
கொள்கையில் மாறாத் தமிழன் என்னும்
பெயரில் நாமும் பெருமை கொள்வோம்