காதல் பயணம்

உன்னைக் கண்ட அந்த நாள்
இன்றும் என் நெஞ்சில் சுவடாய் ஒட்டிக் கொண்டிருக்கிறது

நீ அணிந்த பச்சை வண்ண சுடிதார்
கன்னத்தில் இருந்த மச்சம்
உந்தன் விழியின் வளைவில் சிக்கினேன் அக்கணம்

நெற்றியில் விழுந்த கூந்தலை நீ ஒதுக்கும் போது
உன் பார்வையில் இருந்து விலகியவன் நான்

கார்மேகமிடம் திருடி இட்ட மையில் ,உன் கண்கள்
பௌர்ணமியில் மிளிரும் நிலவாய் ஒளிர்ந்தது

என் தாயிடம் இருந்த ஈர்ப்பு
உன் கண்கள் கொண்ட கவர்ச்சி
என்னை இழுத்தாய் உன்னோடு

நரம்புகளில் பரவிய இரத்ததின் வேகத்தில்
இதயம் ரெட்டிப்பாக துடித்தது
என்னுள் நடுக்கத்தை தந்தது அந்த பார்வை

நீ கடக்கும் சாலையை தினமும் அணு அணுவாய் அலைவேன்
என்னை பார்ப்பாயா என்று ?

கண்ணாடி முன் காதலை சொல்ல வந்த தைரியம்
உன்னைக் கண்டு சொல்ல முடியவில்லை
வாழ்வா : சாவா என நினைத்து
காகிதத்தில் காதலை தீட்ட நினைத்தேன்
உன் உருவம் பதிந்த மனதிற்கு
காதலை வசைபாட எழுத்துக்கள் வரவில்லை
இறுதியில் பல காகிதம் மடிய வரைந்தேன் அம்மடலை

உன்னை பார்த்த இடமெல்லாம் அலைந்தேன் காதலை சொல்ல
சரியாய் அமைந்தது ஒரு தருணம்
மனதினை திடபடுத்திக் கொண்டு கடிதத்தை உன் கை அருகில் நீட்டினேன்
நீ சிந்தித்த அந்த 10 நொடிகள் செய்வதரியா மழலை ஆனேன்

எப்பொழுதும் சிரித்து பார்த்த உன்னை, அன்று
சிவந்த கண்களும்
அனலாக வந்த மூச்சுக் கற்றும்
என்னை சொல்லாமல் கொன்றது
அடுத்த கணமே கடிதத்தை கிழித்து முகத்தில் எறிந்தாய்

ஒரு வருடம் சென்ற வழி(லி) தெரியவில்லை
கிழிந்த கடிதம் மட்டும் எஞ்சியது உன் நினைவுகளோடு

காதலை மாறாக்க முடியாமல்
மறுபடியும் கிழிந்த மடலுடன் உன் முன் நின்றேன்
நீயோ எதுவும் பேசாமல் கோபம் கொள்ளாமல்
கடிதத்தை பெற்று சென்றாய்

இரண்டு வாரம் உன் பதில்கள் இல்லாமல் வாழ்ந்த காலம்
கனவுகள் இல்லா இரவை கழித்தேன்
ருசி இல்லா உணவை ருசித்தேன்

ஒரு நாள் கைப்பேசி சிலிர்க்க
ரிங்கரமான உன் குரல்
எனக்கு மீண்டும் ஒரு முறை உயிர் தந்தது
என் காதலை நம் காதல் ஆக்கினாய்

என் தவறுகளை உணர்த்த
பல தடவை கன்னத்தில் அறைந்தாய்
என்னை தீண்டிய ஒவ்வொரு முறையும்
உன் அன்பை நினைத்து புன்னகைத்தேன்

நீ காலையில் அனுப்பும் குறுந்தகவல்
என் களவாணியை எழுப்பும்
பதிலுக்கு அது என்னை எழுப்பும்

பிறந்த நாளுக்கு நீ தந்த பரிசு
யாரும் தந்திடாத புதிர்
உன் பெயர் எழுதிய சிகரெட்
நான் வாழ்வில் கடைசியாய் புகைக்க நீ கொடுத்த பரிசு

கடைசியாய் சுவைத்தேன் ஒரு முறை
புகையாய் என்னுள் சென்று
உயிருள் கலந்தாய் என்னோடு

உலகில் உள்ள அனைத்து காதலர்களும்
அதிர்ஷ்ட்டமானவர்கள் நம்மைத் தவிர
நாம் சேர்ந்த நேரத்தை கணக்கில் கொண்டால் அது ....

வேலை தேடும் வேளையில் உன்னை மறக்க
நீ கோபம் கொண்ட நிமிடம்
நான் எவ்வளவு முறை மன்னிக்க கேட்டும்
நீ மறுத்த நிமிடம்
உன் கண்களால் என்னை சுட்ட நிமிடம்

சிவனுக்கு ஏற்ற குணமும்
சிவனுக்கு ஏற்ற பெயரும் கொண்டவளே

கல்லூரியில் இருவர் கண்களும் பார்த்துக் கொள்ளும்
ஆனால் பேசாது, மனது பேசும் உலகிற்க்கு கேட்காது

பூங்கொத்து மேசை மீது வைதேன்
தொட்டு பார்த்த உனக்கு மன்னிக்க ஏனோ மனமில்லை

உன் சுவடுகள் பதிந்த சாலையில் தனிமையில் நடந்தேன்
கால் தடங்களோ என்னுடன் நடக்க
உன் மௌனமோ என்னை கொன்றது

இப்பொழுதும் உன்னை நினைக்கும்
ஒவ்வாரு முறையும் கண்ணில் நீராக நிற்பாய்

உன்னை நினைவுகளை மறாக்க மதுவை நாடினேன்
தேகம் அறியா வலிகளை உன் பாசம் தந்தது

நீயோ சுவாசமாய் இருக்க
என்னுள் இருந்து உன்னை களைய முற்பட்டேன்

மழையில் பிறக்கும் குமிழாய் பிறந்தேன்
சிறு பிழையில் சரிந்தேன் அடியோடு
உயிரை மாய்க்க எண்ணினேன் விசனமோடு

குருதியின் நாளத்தை கிழித்தேன் காதலின் வலியோடு
கண் மூடி தரையில் விழுந்தேன் தேவதையே உன் நினைவோடு

எழுதியவர் : கண்மணி (14-Oct-14, 1:44 pm)
Tanglish : kaadhal payanam
பார்வை : 416

மேலே