அருவியில் நான்

இதழோரம் தேனருவி.
இதுதானோ சுவையருவி.
இவள்தானோ மலையருவி. - என்னோடு
இணையுமோ இப்பூ அருவி.

பருவமெனும் தேன்கூட்டில்
பாவையவள் மெருகூட்டி நின்றாள்.- அவள்
பார்வையிலே, போதுமெனும் சொல்லை - நான் மறுக்க
பார்க்கப் பார்க்க பதைக்க வைத்தாள்.

பாசமெனும் கூட்டுக்குள் சிறைப்பட்டவன் - அவள்
பார்வை(யில்) பட்டவுடன் - காணும்
பரிதவிப்பினை மறந்து சிதைப்பட்டவன்.
உயிரோடு எரியூட்டை காணுகின்றவன் - அவள் இதழோரம்
உருளும் தேனருவியில் நனைய துடிக்கின்றவன்.
காதல் எனும் அருவியில் - அவளொரு ஐந்தருவி
காத்திருந்தேனோ அதில் நனைய இப்பிறவி.
விழியாலே வழியுது அத்தேனருவி. - நான்
வீழ்ந்து விளையாட தேவை அவளது உதவி.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (15-Oct-14, 8:21 am)
Tanglish : aruviyil naan
பார்வை : 63

மேலே