ரவுடிக்குப் பட்டப்பெயர்

ஏண்டா பசங்களா. நான் இந்தப் பகுதிலெ பத்துபதினஞ்சு வருஷமா பெரிய ரவுடியே இருக்க்றேன். என்ன இதுரைக்கும் போலீசு இருபது தடவ கைது பண்ணிருக்காங்க. ஒவ்வொரு தடவையும் என்ன கைது பண்ணின அடுத்த நாள் பேப்பர்ல் கொலகாரன்பேட்டை பிரபல ரவுடி செல்வம் கைதுன்னுதான் செய்தி போடறாங்க. புதுசா மொளைக்கிற ரவுடிக்கெல்லாம் முட்டை ரவி, நொள்ள பாலா, வெள்ள கருணா, கொம்பு குமார்ன்னெல்லாம் பட்டப்பேரு இருக்கு. எனக்குப் பட்டபேரு இல்லாம எம் பேர மொட்டையா ரவுடி செல்வம்ன்னு போடறது என்னக் கேவலப்படுத்தற மாதிரி இருக்குடா பசங்களா?
எனக்கு ஏதாவது பேரு வையுங்கடா.
சரி அண்ணே. நீங்க எந்த நேரமும் எதையாவது தின்னுட்டு அல்லது கொறிச்சிட்டே இருக்கிறீங்க. அதனால உங்க தம்பிங்க நாங்க உங்களுக்கு பன்னிங்கற பட்டப் பேரத் தர்றோம். செல்வம்ங்க்ற உங்க பேருக்கு முன்னாடி பன்னின்னு போட்டுக்கறது நல்லா இருக்கும்ன்னு நெனைக்கறோம் அண்ணே.
வெரி குட்றா பசங்களா. இன்னயிலிருந்து நான கொலகாரன் பேட்டை பிரபல ரவுடி பன்னி செல்வம். இந்தப் பேரு தாண்டா இனிமேல் பேப்பர்லெ வரணும்.