காதலோடு சொல்லுகிறேன்
எழுத தெரிந்த அளவிற்கு
பேச தெரியாது..
என்று உண்மையாய் ஒப்புகொண்டாலும்..!
உங்கள் கவிதை வரிகளில்
பிழை காண்கிறேன்..
விழுதுகள் இல்லாத ஆலமரம்
உலகினில் இல்லை என்பதை
உங்களுக்கு உணர்த்தமுடியாமல்
என் கண்கள் குளமாகினபடி..!
உன்மீது கொண்ட காதலால்
உன்னை கட்டியணைக்க
மேடை ஏறிய மனம்
எட்ட முடியாத உயரத்தில்
நீ இருந்ததை எண்ணி பெருமையுடன்..
உன் விரல்களை மட்டும் தழுவியபடி
திரும்பியது சற்று ஏக்கத்துடனும்..!!!
உன் விழுதுகளில் நானும் ஒருவன்
காதலோடு சொல்லுகிறேன் தோழரே...
நீ கவிதைக்கு சொந்தகாரர்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
