பாதை மறந்த கதை

வலைதளங்களிலும் குறுந்தகவல்களிலும் நேரம் கழிக்கும் நாம் என்றாவது மனம் விட்டு நெருங்கியவர்களிடம் பேசுகிறோமா? கைச்சுமையை குறைக்கத்தான் எந்திரம் கண்டுபிடித்தோம், வாய் பேச்சை கூட சுமையை என்னிவிட்டோமே! இதுவா நம் முன்னோர் நமக்கு அமைத்து தந்த பாதை?
பண்டைய பண்பாட்டால் பெயர் பெற்ற பரம்பரயடா நம் பரம்பரை. வழிப்போக்கில் வந்தவருக்கும் வயிறு நிறைய உணவளிப்பது நம் பண்பாடு. இன்று, வழியில் யாரேனும் உறவை கண்டுவிட்டால் ஓடி ஒளிந்து கொள்கிறோம். இன்று பிறக்கும் குழந்தைக்கு தாயின் தாலாட்டு பிடிக்கவில்லை, குத்துப்பாடல் கேடு தான் உறங்குகிறது. பாரதி கண்ட கனவிதுவோ?

எழுதியவர் : (16-Oct-14, 5:31 am)
பார்வை : 65

மேலே