IT என்னும் பம்மாத்து - வளர்ச்சிப் படிகள் - Stages - 2

ஜூலை 2014ம் ஆண்டு நிலவரப்படிதமிழ்நாட்டில் 552 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை தோராயமாக 7,50,000 பொறியியல் மாணவர்கள் வெளிவருகிறார்கள். இதில் 1,00,000 மாணவர்கள் மட்டும் தமிழ் நாட்டில் இருந்து (550 * 180 ( மூன்று பிரிவுகள் என்று கணக்கில் கொண்டு)

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளும் மண்டலங்களுக்கு உட்பட்டு அவைகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

College – A, Dept – AA, Practical – AAA, Staff – AAAA, External – B

AAAA: வாங்க, வாங்க B சார், நல்ல வேள, நீங்க வந்தீங்க இல்லேன்னா Practical ரொம்ப கஷ்டமா போய் இருக்கும்.

B : ஏன் அப்படி சொல்றீங்க, என்னாச்சு?

AAAA: போன தடவை C காலேஜ்ஜில் இருந்து ஒருத்தன் வந்தான்(மரியாதை குறைவு - கவனிக்க). என்ன என்ன எக்ஸ்பிரினென்ட், அல்காரிதம் எல்லாம் கேட்டு கொன்னுபுட்டான் சார். இதனால நம்ம பசங்க மார்க்கே எடுக்க முடியல. First மார்க்கே 70 தான்னா பாத்துகோங்களேன் சார். இவன்லாம் என்ன மார்க தூக்கிட்டா போகப்போறான். இன்னொரு தடவ அவன் காலேஜிக்கு எக்ஸ்டேனலா போகாமலா போயிடுவேன். அப்ப இருக்கு அந்த பசங்களுக்கு.

மாணவனை காப்பாற்றுவதாக நினைத்த நிமிடங்கள் பிரச்சனை ஆரம்பமாகிறது.

காட்சி 1 :
What is this ya? You know, In Google office every 100 meter, there is one refreshment shop is there. நம்ம காலேஜும் தான் இருக்கே. ச்சேய்

காட்சி 2 :
டேய், மச்சான் என்னடா bf ?
bf ??
அட இது கூட தெரியாதா. Breakfast அப்படீன்னு அர்த்தம். Just 2 பப்ஸ்(pups, puff.. தெளிவா சொல்லுங்கடா) அப்புறம் 1 coke. That’s all. (அட கம்மனாட்டிகளா)


காட்சி 1 ம் காட்சி 2 ம் தொடர்புடையவை.


Placement office:
சார், இந்த பையன் எப்படி செய்திருக்கிறான் சார்?
சுமாராதான் செய்திருக்கிறான் .
சார், பையன் நல்ல பையன் தான். டேய் தம்பி சாருக்கு ஒரு ஜூஸ் எடுத்துகிட்டுவா. அதனால நல்ல பையன் தான் சார், 8.4 வச்சிருக்கான் சார். இந்த டயத்ல அவனுக்கு கொஞ்சம் உடம்பு முடியாம போயிடுத்து. கொஞ்சம் பாத்து செய்ங்க சார்.

மனிதவள மேம்பாட்டு அறிக்கையின் படி (2014), சுமாராக 20% சதவீத மாண்டவர்கள் முதல் வருடத்தில் வேலையில் சேருகிறார்கள். (அதாவது 20000 மட்டுமே – சென்ற வருட மாணவர்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை). அடுத்த வருடத்தில் அது 40000 ஆக ஆகிறது. அதோடு நின்றுவிடுகிறது.

அதாவது அவன் வேலைக்கு சேரும் பொழுதுகளில் 40000 இருந்து ஒருவனக தேர்ந்தெடுக்கப்படுகிறான்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (16-Oct-14, 3:42 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 281

சிறந்த கட்டுரைகள்

மேலே