மீண்டும் மீண்டும்
மீண்டும் காதல்
செய்ய வேண்டும்
கவிதை எழுது வதற்காய்
மீண்டும் கொலை
செய்ய வேண்டும்
மனம் திருந்தி வாழ்வதற்காய்
மீண்டும் மணம் புரிய வேண்டும்
இன்னொரு பெண்ணின்
மனம் அறிவதற்காய்
மீண்டும் பயிர்
செய்யவேண்டும்
மேலும் கடனாளி ஆவதற்காய் .......
மீண்டும் கிராமத்துக்கு
போகவேண்டும்
முற்றத்து காற்றில்
முழுதூக்கம் கொள்வதற்காய்.
இப்படியே
மீண்டும்..மீண்டும்...
.கடைசியில்
மீண்டும் வாக்கு
அளிக்க வேண்டும்
வழக்கம் போல்
ஏமாந்து போவதற்காய் .