பெரும் தலைவன்

இப்படி ஒரு
மனிதன் இருந்தானா?..
என்று வியந்திட
வைப்பவன்!
தர்ம நெறிதனை
மணந்தவன்
இவன் ஒரு
கர்ம வீரன்!
இத்திரு நாட்டினை
வளப் படுத்தி
வையத்தில் வாழ்வாங்கு
வாழ்ந்தவன்!
அரசியல் சாக்கடை
என்பவர் இவன்
அரசோச்சிய விதந்தனில்
மகிழ்ந்தனர்!
உன்னைப் போல்
ஒருவனல்ல பல்லாயிரம்
காமராஜர் வேண்டுகிறோம்
எங்கள் நாட்டினுக்கே !
----
ஏறக்குறைய ஒரு மாதத்தில்
நான் எழுதியவை இத்தளத்தில்
அத்தனையும் நட்புகள் தந்த ஊக்கத்தில்
தந்தை தாய் பெருந்தலைவர்
பற்றி சொன்ன கவிதையோடு
முற்றுகிறது நூறு.
நன்றிகளுடன்..
கருணாநிதி!