என் காதல் வாழவே
அந்தி மாலை நேரம்
கடலின் சாலையோரம்
உன்னோடு நான் நடந்தால்
ஒரு காதல் அரங்கேறும்
மனம்விட்டு பேசிடும் ஆசை
கண்களால் நீ பேசும் பாஷை
ஒரு மொழி இல்லையே
எனக்கு புரியலையே ....
இருந்தும் தலை அசைப்பேன்
புரிந்தது போலவே
உன் அருகாமை போதுமே
என் காதல் வாழவே