நிரல்யா -1

கார்மேகத்தில் சிக்குண்ட வெண்மேகம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே வெளிச்சமாய் வெளிவருவதுப்போல் அடர்ந்த காட்டில் கும்மென்ற இருட்டில் வெண்ணிற பனித் துளிகள் இருட்டிற்கு வெளிச்சம் கொடுக்க பளிச்சென்று அழகிய வெள்ளை உடையில் ஒரு பெண் தேவதையாய் வருகிறாள்….....................................


யார் அவள் ????


வானில் இருந்து இறங்கிய தேவதையோ ???


இல்லை !!!!!!!!


இவள் தான் உலகின் முதல் அழகியோ ???


ஒரு வேளை இவள் தான் ஏவாளோ இல்லை அமராவதி-யோ???


யார் இவள் ???


” நிரல்யா “ , “ நிரல்யா “ என்று எங்கிருந்தோ சத்தம் கேட்க , பூவை விட மிக மென்மையாய் திரும்புகிறாள்……


இவள் பெயர் நிரல்யா-வோ ????


யார் அழைத்தது அவளை ???


அத்தனை மெளமான இருட்டின் தனிமையில் செல்லும் அழகிய அந்த தேவதையை யார் அழைத்திருப்பார் ????


யாராய் இருக்கும்????


யார் இந்த நிரல்யா ??


அவள் ஒரு சுட்டிப்பெண்… வளர்ந்தாலும் ஒரு குட்டிப்பெண்…. வயதுக்கு அதிகமான வீம்பு பிடிவாதம்….துரு துருனு அவள் பார்வையும் பேச்சும் எழில் கொஞ்சும் புன்னைகையிலும் கம்பீரமான நடைகளிலும் மயங்காதாவங்க யாரும் இல்ல…அதுவே அவளுக்கு உண்டான தனி அழகு…அவளின் தனி அடையாளம்…ஆனாலும் அவ ரொம்ப எளிமையான , நல்ல வாயடிக்குறப் பொண்ணு…ஆனா அடுத்தவங்க மனச புரிஞ்சு நடந்துக்குவா…..இந்த வயசுல இப்படி ஒரு பக்குவமான பொண்ணா –னு எல்லாரையும் வியக்கவைப்பா ….பொறுமைக்கு மறுப்பெயர் நா நிரல்யா தானு சொல்லுவாங்க
வெளியிடங்கள்-ல…..................................................


ஆனா இதெல்லாம் வெளி உலகத்துக்கு மட்டும் தாங்க…..வீட்டுல எப்படி இருப்பா????? அத நீங்களே பாருங்க….


அத அடுத்தபகுதி-யில சொல்லுறேன்….. தொடரும் ……….

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (17-Oct-14, 7:23 pm)
பார்வை : 366

மேலே