எப்படி சொல்வேன்

கண்ணாடி முன் நின்று
நூறு முறை ஒத்திகை
பார்க்கிறேன்
உன்னிடம் மூன்று வார்த்தை
சொல்வதற்கு

அவனிடம் பலவற்றைப் பற்றி
பேசுகிறேன் ஆனால் அந்த
மூன்று வார்த்தை சொல்ல
மட்டும் எனக்குள் நடுக்கம்

சொன்னால் அவன் ஏற்பானா ?
இல்லை வெறுப்பானா?
என் கேள்விகள் சொல்ல
விடாமல் தடை போடுகையில்

அடி மனதில் சிறு பயம்
சொல்லவில்லையெனில் அவன்
வேறுயாராவதற்கு உரிமையானால்
சொன்னால் இப்போது
பேசுவதையும் விட்டு விட்டால்

என் உயிர் நிலை பெறாது என
என் மனம் அடித்துச் சொன்னது
இரு தலைக் கொள்ளி எறும்பாய்
தவிக்கிறேன்

சொல்லவும் முடியாமல்
சொல்லாமல் இருக்கவும்
முடியாமல் ..............

எழுதியவர் : fasrina (18-Oct-14, 11:37 am)
Tanglish : yeppati solven
பார்வை : 113

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே