ஏசு திருப்புகழ்

****இது ஐயா காளியப்பன் எசேக்கியல் அவர்களுக்கு சமர்ப்பணம் *******


பெத்த லஹம்பெற்ற அரசனாம்
கத்த னவன்உற்ற உயிரென
பித்தந் தெளிவிக்கும் ஒருவராய் -பிறந்தீரே
தத்தை புனிதத்து மகளவள்
சுத்த மரியத்தின் கருவினில்
குத்த மறநித்தன் உருவென -மலர்ந்தீரே
பத்து மிரண்டொத்த துணையென
பக்கம் வரும்முத்துத் துறவிகள்
பற்றிப் பிடிபொற்கைத் தளமதைத் -தருவீரே
வெட்டிப் பலகெட்ட வழியினில்
கட்டுப் படமட்டும் மனிதரை
துட்டத் தனமெங்கும் விளங்கிடும்-இருள்நாளில்
முத்துச் சுடர்முத்தித் தரும்வழி
வித்தின் நிழல்சித்தத் தினித்திடும்
தித்தித் திடும்வித்தைப் பலபுரி -இடையோரே
மக்கள் மனம்மக்கும் பொழுதிதில்
வெக்கம் அறதப்புப் புரிகையில்
துக்கப் படும்குப்பைத் துகலெனும் -அடியேனை
கட்டிப் பிடித்தின்பம் பெருகிட
முட்டித் தரைவைத்துத் தொழுதிட
அப்பம் தருமப்பன் திருவடி- அடைந்தேற
நித்தம் நினைத்துச்சிக் குளிர்ந்திட
எத்தப் புமத்துன்னைப் புகழ்ந்திட
பக்கம் வருமொக்கத் துணையென -திகழ்வீரே!

எழுதியவர் : அபி (18-Oct-14, 12:27 pm)
பார்வை : 98

மேலே