தாய் மாமன்

ஜானகியை மணப்பதற்கு
இராமன் அன்று
வில் ஒடித்தான்!- அந்த
ஜனகன் ஆசைப் படி!

உன்னை அடைவதற்கு
நானும் என்
பல் கடித்தேன்- உன்
தகப்பன் சொல்! அப்படி!

வேலை இல்லையாம்
எனக்கு உன்னைத்
தேடி வர - சொல்லிவிட்டு
சந்தோஷம்! எதற்கு?

தேவையா எனக்கு
உன் காதல் தீ
அணைக்கும் -வேலை
உண்டு! சொல்லடி!

தாய் மாமனுக்கே
இந்த நிலை
தகப்பன் பொன்னுசாமிக்கு -சொல்லி
வையடி! மண்ணுசாமி!

உடைந்த பல் கட்டுதற்கு
போகின்றேன் ஊருக்கு!
புறமுதுகிட்டு ஓடவில்லை-நீயே
சொல்லிவிடு! மண்ணுசாமிக்கு !

எழுதியவர் : karuna (18-Oct-14, 2:58 pm)
Tanglish : thaay maaman
பார்வை : 160

மேலே