நாயர் டீ

நாயர்க்கிட்டே ஒரு டீ அடிச்சுட்டு போங்க !
அப்புறம் பாருங்க !
உங்கள் உற்சாகத்தை !!

மனசு
சஞ்சலமா
இருக்கா ?

மனதில் ஒரு
தெளிவு பிறக்கும் !

உடல் சோர்வா இருக்கா ?
உற்சாகம் உடனடியாய் கிடைக்கும் !

என்ன டீ வேணுங்க
உங்களுக்கு ?

ஏலக்காய் டீ ?
இஞ்சி டீ ?
மிளகு டீ ?
மசாலா டீ?
லெமன் டீ ?

எல்லாம்
கை வசம் !

பொண்டாட்டியோட சண்டையா ?
ஒரு டீ அடிச்சுட்டு போங்க !
சமரசம் ஆயிடும் !


வேலைப்பளுவா ?
வேளைக்கு ஒரு டீ அடிங்க
வேலை சுளுவாகும் !

கவிதை எழுதும் போது
வார்த்தைகள் தடை படுதா ?
ஒரு டீ அடிச்சா கவிதைக்கு
கருத்துக்கள் குமியும் !

உழைப்பவர்களுக்கு
உற்சாகம்
ஒரு கிளாஸ் டீ தாங்க !

சுவையான வாழ்க்கைக்கு
சுவையான நாயர் டீ !!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (19-Oct-14, 9:14 pm)
பார்வை : 706

மேலே