உன்னை நினைத்தால்
*
பரம் பொருளே உருபொருளே முதற்பொருளே
உன்னை நினைத்து ஆரம்பிக்கின்றேன்
இந்த பயணத்தை துணையாகவா
நீ தள்ளிவிட்ட கமண்டலம் நீர் ஆற்றுபடுகை ஆனது
அது போல என் தலை மண்டலத்தை உன் கரத்தாள்
தட்டிவிடு கவிதை ஆர்பரித்து ஓடட்டும்
உன்னை நினைத்தால் நிழல்கூட உயிர் பெரும்
*
உன் பத்தாவது மாத வலி
நூறு நியூக்ளியர் அணுகுண்டின்
அதிர்வா
உன் வைத்த காயவச்சு
என் வைத்த கழுவி விட்ட
உன்னை நினைத்தால்
நிலா கூட சோறு சாப்பிட
பூமிக்கு வரும்
*
கண்ணாடி பார்த்து சிரிக்கிற
உன் கண்ஜாட தேடிஅலையிற
வெள்ளை தாமரையில் அமர்ந்து இருப்பவளானு யோசிக்கிற
உன்னால் ஏறும்ப கூட கையில் ஏந்தி நேசிக்கிற
மாலை நேரத்துல சாலை ஓரத்துல
உன்னோடு நடக்கையில மழைசாரல் வீசக்கண்டென்
இது எல்லாம் உன்னை நினைத்ததால்
*
நான் வேப்பில்லை கொடுத்தேன்
மருந்து என எடுத்து கொண்டாய்
என் பாதையில் கண்ணாடிஒடுகள் கிடந்தது
வெறும் காலில் நடந்தேன்
நான் உனக்கு செருப்பாக
வருகிறேன் என்றாய்
உன்னை நினைத்தால் நட்புக்கு
ஒரு சின்னம் உன்னை
என காட்ட சொல்லுகிறது
*
உன் பணியின் பெயரை சொன்னாலே
தானாக வணக்கம் சொல்லும் கை
சற்றே மேல் எழுந்து
வீர வணக்கம் சொல்லும் நெஞ்சம்
வெயிலோ மழையோ
புயலோ பனியோ
அதிலும் உங்கள் பணியே
எல்லையோரம் படிந்து கிடக்கும்
உங்களை நினைத்தால் என் கவிதை
வார்த்தைகூட நெஞ்சம் தட்டி
பெருமிதம் கொள்ளும்
*
படிப்பு ஒரு கைபிடிப்பு
அதுவே வாழ்க்கைக்கு
உயிர் துடிப்பு
பகையிருந்தால் உடனே காட்டு
புகையென ஓடிவிடும்
பாசத்தை பதுக்கிவைத்து காட்டு
நீ பாடையில் ஏறும்வரை
பாசம் தொடரும்
என்று அறநெறி சொல்லும் வள்ளுவர்களே
உங்களை நினைத்தால் என்
அடுத்த பிறவியும் உங்களை தேடி
ஓடிவந்து விட்டது
*
இப்படி உங்களை நினைத்தால்
எப்படி வார்த்தைகள் வந்து விழுகின்றன
என் கவிதை குதிரையில் இருந்து இறங்கிவிட்டேன்
உங்கள் பெருமையை நினைத்துகொண்டு
(க.பன்னீர் செல்வம்,பி.காம்(சி.எஸ் ) இரண்டாம் ஆண்டு சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் வேல்ராம்பேட் ,பாண்டி) கவிதைக்காக பன்னீர் கார்க்கி என வைத்துகொண்டுளேன்