என் வலிகளில் சில

@@பிரிவு @@

வலிகளில் என் இதயமும்
கண்களும் கலங்குவதை
உணர்ந்தாயா நீ முழுமையாக ?

எத்தனை கிறுக்கினாலும்
என் வலிகள் மட்டும்
மாறபோவதில்லை ...

ஏமாற்றம் கண்ட என் இதயம்
அறிந்து தானே காதல் சொன்னாய் ...

அன்று உணரவில்லையோ
என்னையும் என் நட்புகளை பற்றியும்...

வாழ்வில் நான் மிகவும் வருத்தப்பட
நிகழ்வு உன் வாழ்வில் நுழைந்தது
மட்டுமே...

வார்த்தைகளால் கேவலப்படுத்தினாய்...
என்னையும் என் நட்பையும்...

உன்னை நேசித்தமைக்கு நான்
பெற்ற காதல் பரிசு வலிகள் மட்டுமே...

புரிதலும் நம்பிக்கையும் தானே
காதலின் உயிர்...

உயிரே இல்லாத காதலாகிவிட்டது
என் காதல்....

என்றுமே உணரமாட்டாய்
என்னையும் என் காதலையும் ...

எழுதியவர் : SAGI (20-Oct-14, 4:11 pm)
பார்வை : 156

மேலே