வியாபார பொருளாய் தமிழன்
நாம் தமிழரா இந்தியரா என்ற கேள்விக்கு பதில் முதலில் தமிழன் அதன் பிறகு இந்தியன்.
ஏழு கோடிக்கு மேல் இருக்கும் தமிழர் தமிழ் நாட்டில், மீதி கோடி தமிழர் அயல் நாட்டில் பிரிந்து இருந்தாலும் உணர்வில் கலந்து தான் இருக்கிறோம் என்று ஏக வசனம் பேச நான் வரவில்லை ஏன் என்றால் அது நம் தமிழ் நாட்டின் அரசியல் வாதிகளின் வேலை.
ஒவ்வொரு முறையும் ஈழம் பிரச்சனை என்று அரசியல் வாதிகள் பேசும் போதும் எனக்கு தோன்றும் கேள்வி இவர்கள் தமிழர் தானா என்று .
இன்றைய நாளில் அரசியல் வாதி என்று சொல்லும் எல்லோரும் அயோக்கியர்களே அதில் யாரும் விதிவிலக்கு அல்ல.ஈழ கொடுரத்தை தடுக்க நினைத்து இருந்தால் அன்றே தடுத்து இருக்க முடியும்.ஆந்திராவில் எனக்கு என்று ஒரு தனி மாநிலம் வேண்டும் என்று ஒரு பிரிவினர் போராடி பெறுகின்றனர்.ஆனால் இங்கே அரசியல் நடத்த வேண்டும் என்பதற்க்காய் மட்டும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.
மாணவ அமைப்பு போராடினால் தமிழ் அமைப்பு வேடிக்கை பார்க்கிறது.தமிழ் அமைப்பு போராடினால் அரசியல் வாதிகள் வேடிக்கை பார்க்கின்றான்.அரசியல் வாதி போராடினால் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.
அங்கே ஒரு மனிதன் போராடும் போது குரல் கொடுக்க இங்கே ஆள் இல்லை.ஒருவரை குறி வைத்து ஒரு இனத்தையே அளிக்கும் போது தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை .ராஜ பக்சே விமானத்தில் பறந்து டெல்லி வந்தால் நாம் நம் எதிர்ப்பை தரையில் நின்று கருப்பு கொடி காட்டி எதிர்க்கிறோம்.
ஈழ தலைவர் பிரபாகரனை தமிழன் என்ற ஒரே காரணத்தில் தான் நாமும் நம் அரசியல்வாதிகளும் காக்க மறந்து விட்டோம்.இதே அவர் இந்த சாதியை சேர்ந்தவர் என்றோ இல்லை இந்த மதத்தை சார்ந்தவர் என்று முன்னிலை படுத்தி இருந்தால் அந்த சமுக ஆதரவு முழுமையாய் கிடைத்து இருக்கும்.ஆனால் தமிழன் என்று சொன்னதால் தமிழனில் நான் எந்த சமுக தமிழன் அவர் எந்த சமுக தமிழர் என்ற எண்ணம் தோன்றி விட்டது.
செய்தி தாளில் ஒரு பக்க கட்டுரை என்னுடையது வர வேண்டும் என்று அரசியல் வாதிகள் ஈழ சம்மந்தமாய் அறிக்கை விடும் போதெல்லாம் இவர்கள் தான் உண்மையில் ராஜபக்சேவின் நெருங்கிய தோழமை என்றும், நம் நாட்டின் தேச துரோகிகள் என்றும் எண்ண தோன்றுகிறது.
செய்தி தாளின் விற்பனைக்காய் இவர்கள் வியாபார பொருளாய் ஆக்கி இருப்பது தமிழனை தான்.ஒன்றே ஒன்று தான் சொல்ல விரும்புகின்றேன் நீங்கள் நல்லவர்கள் என்றால் உதவி செய்யவில்லை என்றாலும் இப்படி ஈன பிறவியாய் வாழாதீர் .