இப்படியும் நடக்கிறது விழித்துக் கொள்ளுங்கள் தோழிகளே-வித்யா
இப்படியும் நடக்கிறது விழித்துக் கொள்ளுங்கள் தோழிகளே.....!!-வித்யா
காதலிப்பதும் காதலில் எல்லை மீறுவதும், ஏமாற்றுவதும், ஏமாறுவதும் வாடிக்கையாகி விட்டது. கல்லூரி நாட்களின் ஓராண்டு விடுதி அனுபவத்தை சொல்லி மாளாது. அறைக்குள் முனுமுனுப்பு சத்தியமாக என் காதையே என்னால் நம்ப முடியாது. ஏனெனில் எவ்வளவுதான் அருகில் இருந்தாலும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது மட்டும் எனக்கு கேட்கவே கேட்காது. என்ன ஒரு திறமை. கம்பீரக் குரல் குருவிக்குஞ்சுகளின் மொழி ஆன ரகசியம் அது. எங்கெங்கு நோக்கினும் அலைபேசியோடு இளம் பெண்களடா......என்று சொல்ல வைத்து விடும்.
ஆனால் நான் சொல்ல வந்தது இதுவல்ல. இரண்டு அழகிகள்...நெருங்கியத்தோழிகள். கிட்டத் தட்ட இரட்டையர்கள். யாராலும் பிரிக்கமுடியா நட்பு. அப்படி ஒரு பிணைப்பு. ஒருவருக்கொருவர் அழகில் சளைத்தவர்கள் அல்ல. அறிவிலும். மூன்றாம் ஆண்டு இறுதிவரை அருகருகே அமர்ந்திருந்தனர். அதன் பின் சில நாட்களாக இடம் மாறி அமர ஆரம்பித்தனர். மூன்றாம் ஆண்டு இறுதியில் ப்ராஜெக்ட் இருப்பதால் யாரும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. அருகருகே அமர்ந்திருந்தும் அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வரும்போதும் இருவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்கவில்லை.
இறுதியாண்டின் தொடக்கத்திலேயே இருவரும் தனித்தனியாய் அமர ஆரம்பித்தனர். கேள்விகள் அவர்களைத் துளைத்தன. என்ன ஆச்சர்யம் இருவரிடமிருந்தும் ஒரே பதில்....... எனக்கு அவள பிடிக்கல. இறுதி நாட்களும் நெருங்கின அப்போதும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. கண்ணீரை மட்டுமே பகிர்ந்துக் கொண்டு அவர்களின் விடைபெறுதல் முடிந்து விட்டது. யாருக்கும் எந்த உண்மையும் தெரியவில்லை.....!! இதிலிருந்தே அவர்களின் நட்பின் ஆழத்தையும் நெருக்கத்தையும் நாம் புரிந்துக் கொள்ளலாம்.
இவர்களின் பிரிவுக்குக் காரணம் என்ன.?
இருவரில் ஒருத்தி கல்லூரி விடுதியிலும் மற்றொருத்தி வெளியே அறை எடுத்தும் தங்கி இருந்தனர். ஆதலால் கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் அவள் தோழி எங்கு செல்கிறாள், என்ன செய்கிறாள் என்பது கல்லூரி விடுதியில் இருப்பவளுக்குத் தெரியாது. சில செய்திகள் காதுக்கு எட்டியும் நம்பிக்கையால் வதந்தி எனவே விட்டுவிட்டாள்.....!
ஏதோ ஒரு நாய்தான் இவர்களுக்கிடையே புகுந்திருக்கவேண்டும் என்பது நீண்ட நாட்களாக எனது எண்ணமாகவே இருந்தது. ஓராண்டுக்குப் பின் இன்றைக்குத்தான் தெரிந்தது...... அழகிகளில் ஒருத்தி தற்போது உயிரோடு இல்லை எனவும். தற்கொலை செய்துக் கொண்டாள் எனவும் தெரிய வந்தது.
கதை என்னவென்றால்.... மது, கீது என்பது அவர்கள் பெயராக இருக்கட்டும். இதில் மது கல்லூரி விடுதியில் இருந்தவள். கீது வெளியே அறை எடுத்து இருந்தவள். கீது டிப்ளோமோ படிக்கும் போது இருந்த கல்லூரித்தோளியுடன் இருந்தால். அவள் தோழி பணிக்குச் சென்று கொண்டிருந்தாள். கீதுவின் அலைபேசிக்கு வந்த முகமறியா அழைப்பு பின்னாளில் காதலாகி இருக்கிறது. அக்காதல் மதுவின் மீதான நட்பை வெறுப்பாக maatri இருக்கிறது. இதற்கு காரணமும் அந்த முகமறியா மனிதன் xxxxx தான்.
அவன் மதுவை ஒரு தலையாகக் காதலித்ததாகவும் மது மறுத்து விட்டதாகவும் மதுவின் அழகை கீதுவிடம் வர்ணித்தும்.....இதே சாக்கில் உரையாடல்கள் நீண்டு xxxxx கீதுவின் உயிரானவன் ஆகிவிட்டான். இதனால் கீதுவிற்கு மதுவின் மீது பொறாமையும்,கோபமும் வந்தது. வெறுக்க ஆரம்பித்தாள். எல்லாவற்றையும் மறைத்தாள். மதுவிற்கு உண்மை தெரிய வந்த போது பிரிந்து போகவும் கீது துணிந்துவிட்டால்... xxxxx -ன் மயக்கத்தில்.
இப்போது கல்லூரி வாழ்வும் முடிந்தது. அவனும் நல்ல பணியில் இருக்கிறான். மதுவின் அழக்டு avalin ஆடம்பரத்தையும் ரசித்த xxxx கீதுவின் அழகை மட்டுமே ரசித்திருக்கிறான். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்....!! மதுவிற்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது.........அழைப்பிதழ் கொடுக்க கல்லூரித் தோழி ஒருத்தியின் அலைபேசி எண் கேட்க அழைக்கும் போது கண்ணீருடன் என்னுடன் பகிர்ந்துக் கொண்டாள்........!!
இதில் சொல்ல வந்தது என்னவென்றால்.........
அழகு என்பது ஒர்வருக்கொருவர் வேறுபடும். நீள முகமும் அதற்கேற்ற விழிகளும் அழகென்றால்.... வட்ட முகமும் மாநிறமும் அதற்கேற்ற விழிகளும் அழகுதான். பொறாமையால் சுயமிழந்து வஞ்சகர்களின் வஞ்சனைக்கு ஆளாக வேண்டாம். நமக்கு நாம் அழகு. ரசனைகள் நமக்கு பேராபத்து........!!
----------------------------------என் தோழிக்கு கண்ணீரஞ்சலி........!!
அவள் இருந்திருந்தாலும் இதையே சொல்ல நினைத்திருப்பாள்...!