வழி தவறி வந்த வானத்து தேவதை

ஒரு விழியில் பொழிகிறாய்
நிலவின் அமுதை
மறு விழியில் தருகிறாய்
அருவியின் குளிரை
இதழ் இரண்டில் தருவதோ
தமிழின் இனிமையை
கருவிழி திராட்ச்சையில்
கனவில் விரிக்கிறாய்
கற்பனை முந்திரி தோட்டத்தை
இதழ் கிண்ணத்தில் வார்பதோ
காதல் மதுவை
இந்திரன் நந்த வனத்திலிருந்து
வழி தவறி வந்த வானத்து தேவதையே
வரவேற்கிறேன் உன்னை
அந்தி மாலையுடன் அழகிய தமிழ்க் கவிதையுடன் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (20-Oct-14, 7:36 pm)
பார்வை : 304

மேலே