நெஞ்சினிலே Episode 12
நெஞ்சினிலே.......
( Still I Love You ) தொடர் கதை Episode 12
கொஞ்ச நாள் இருவரும் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. சில நாட்கள் கழித்து,
ரவி தனது மொபைல் ஐ Silent Mode இல் போட்டு விட்டு தூங்கி விட்டான்.
திடிரென விழித்தான் நேரம் பார்க்க போன் ஐ எடுத்தான் 7 SMS 19 Missed Calls மணி 3.00 ஆகி இருந்தது.
SMS ஐ ஓபன் செய்து பார்த்தான் " Ravi I'm Radha Plz Call Me "
ரவி : ( மனதுக்குள் ) " என்ன இது இந்த நேரத்துல ஷிட் இண்டகின்னு பார்த்து silent ல போட்டுட்டன "
ரவி அந்த நம்பர் க்கு Missed Call செய்தான் அடுத்த நிமிடம் SMS வந்தது.
ரவி : ( SMS ) " என்னங்க இந்த நேரத்துல எங்க இருக்கிங்க "
ராதா : ( SMS ) " நானும் அம்மாவும் Friends உம் ஒரு Leadership Training ஒன்னுக்கு வந்தோம் 3 நாள் Trainingங்க இது என்னட Friend ட போன்தான் "
இப்படி 3 நாட்கள் அதிகாலை வேளையில் பேசி கொள்வார்கள்.
அதன் பிறகு இருவரும் பார்க்கவோ பேசவோ முடியவில்லை. ரவியும் தினமும் ராதா வீட்டு பக்கம் போவான் ராதாவை பார்க்க ஆனால் பார்க்க முடியவில்லை. இப்படியே 6 மாதங்கள் சென்றன.
ராதாவின் Exam Results உம் வந்தது ராதா Pass ஆனதை கேள்வி பட்டு ரவி ரொம்ப சந்தோஷ பட்டான்.
அவனுடைய சில நண்பர்களிடம் " 1st Year Start பண்ணிட்டாங்களா " என்று கேட்பான்.
2 நாட்கள் கழித்து பாடசாலை விடும் நேரத்தில் அவன் நண்பன் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தான். ராதாவும் அவளுடைய நண்பிகளும் வந்துகொண்டு இருந்தனர். 6 மாதம் கழித்து ரவி ராதாவின் முகத்தை பார்த்தான். ராதாவோ தன் முகத்தை குடையால் மறைத்து கொண்டு சென்றாள்.
நண்பன் : " ரவி என்ன முகத்த மறைச்சிட்டு போறா? "
ரவி : " இல்ல சும்மா என்னோட விளையாடுறா சரி நான் போயிடு வாறன் "
என்று சொல்லிவிட்டு ராதாவின் அருகில் சென்றான் ராதா அவனுடைய முகத்தை பார்க்கவும் இல்லை பேசுவும் இல்லை, ரவியோ அவள் வீடு செல்லும் வரை பார்த்து கொண்டு இருந்தான் ராதாவோ திரும்பி கூட பார்க்கவில்லை. ரவிக்கோ அவனை அறியாமல் கண்களில் கண்ணீர் வடிந்தது.
பைக் ஐ வேகமாக கடற்கரை நோக்கி சென்றான். கடற்கரை அருகில் நின்று அழுது கொண்டிருந்தான்.
அதன் பிறகு ரவி மனம் உடைந்து போனான் சரியாக சாப்பிடுவது இல்லை, யாருடமும் சரியாக பேசுவதில்லை, ஆனால் வீட்டிலும் நண்பர்களுடனும் சிரித்தபடி பேசுவான். வெளியே சிரித்துக்கொண்டும் மனதுக்குள் அழுதுகொண்டும் இருந்தான்.
" ஏன் ராதா இப்படி செய்தாள் என்ன காரணம் " என்று ரவிக்கு தெரியவில்லை. " எந்த முகத்தை வைத்து கொண்டு மறுபடி ராதாவை பார்ப்பது " என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அவன் பார்க்க போகவேயில்லை மனதுக்குள்லேயே அழுது கொண்டிருந்தான் யாரிடமும் சொல்லவது எப்படி சொல்லவது என்று தெரியவில்லை அவனுக்கு.
தொடரும்...................