இன்பம் பொங்கும் தீபாவளி
வந்துவந்து செல்லும் அலைகள் !-நம்மை
வருடி விட்டு செல்லும் தென்றல் !
உடலை சிலிர்க்க வைக்கும் மழைத்துளி!
சில்லென்ற வானிலை !
வானில் மிதந்து செல்லும் மேகங்கள் !
சுகமாய் உறங்க வைக்கும் இனிய அதிகாலை !
பரவசப் படுத்தும் பண்டிகைகள் !
சொந்தங்கள் சூழ்ந்த இனிய இல்லம்!
புது வரவை தந்த புத்தாடைகள் !
படபட வென வெடிக்கும் பட்டாசுகள் !
தின்ன விரும்பும் தின்பண்டங்கள் !
திகட்ட வைக்கும் இனிப்புகள்!
கண்களுக்கு விருந்தளிக்கும்
வண்ண வெடிகள் !
காதைப் பிளக்கும்
பூத வெடிகள் !
மழலைகளை மகிழ்விக்கும்
மத்தாப்புகள் !
புது மணத்தம்பதிகளுக்கு
புத்துணர்ச்சி ஊட்டும்
புதுமை தீப ஒளி!
இவைகளை ஒருங்கே
காண விடுமுறைகள்
தந்த சந்தோசம் -அனைத்தும்
நிறைந்த இந்த தீபாவளி-ஓர்
இன்பம் பொங்கும் தீதீபாவளி !!!!!
அனைவருக்கும் இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள் !