தீப-ஒளித் திருநாள்

எத்திக்கும் தித்திக்கும் தீபாவளி !
எதிரொலிக்கும் இடிமுழக்கமாய் !

இன்முகம் காட்டி இனிதாய் வரவேற்கும் உறவுகளும்
வித விதமாய் உடை அணிந்து ஓடி ஆடும் மழலைகளும்

வகை வகையாய் பலகாரமும்
வடை சட்டிக்கும் வாய் வலிக்கும் !

நாள் முழுக்க வெடிக்கும் வெடி
கால் கடுக்க வெயிலில் நான் !

எல்லாம் தெரிந்த எனக்கு தெரியாத ஒன்று
என் வீட்டு மரத்தின் மேல் சிட்டுக் குருவி !

எதிர் வீட்டுக்காரனுடன் சண்டை
என் வெடியால் எகிறிய கண்ணாடிக்காய் !

என்னோடு சண்டையிட முடியாமல்
எங்கோ சென்று ஒளிந்துகொள்கிறது

பாவம் அந்த சிட்டுக் குருவி !
பரிதாபமாய் பார்க்கிறது என்னை !

எனக்கு இறங்கவில்லை மனம் !
இறங்கி வந்துவிட்டது மழை !

என் பட்டாசுகளை நனைக்க !
சிட்டுக் குருவிக்காக

இன்றுதான் வந்தது எனக்கும்
இந்த சந்தேகம் !

தீப ஒளித் திருநாள் எப்படி மாறியது
தீப ஒலித் திருநாளாக !

பதில் கிடைக்கவில்லை எனக்கு !
பகிர்ந்துகொள்கிறேன் பட்டாசுகளுக்கு பதில்

என் வீட்டு பலகாரத்தை
என் பக்கத்து வீட்டுக்காரரான பறவைகளுடன் !

இன்று என் தீப-ஒலி ஒளிந்து
பிறந்துவிட்டது தீப-ஒளி

உங்களுக்கு எப்படி ?



என் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீப-ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் !


என்றும் அன்புடன்,
உங்கள் நண்பன்,

த.பிரவீன்குமார் (முகில்)

எழுதியவர் : முகில் (21-Oct-14, 8:41 pm)
பார்வை : 2116

மேலே