வகுப்பறை

நல்லவன்,கெட்டவன்,முட்டாள்,புத்திசாலி என
உலகம் அவனை ரகம் பிரித்தாலும்
அனைவரையிமே அறிவாளி என்னும்
கருவிலிருந்து வந்தவனாகவே
வாஞ்சையோடு அழைக்கும் அறை....வகுப்பறை!

தாய் அற்றவனுக்கு தாயாகவும்,
தந்தை அற்றவனுக்கு தந்தையாகவும்,
உறவுகள் அற்றவனுக்கு உறவையும் ,
நண்பன் என்னும் ஒருவன் மூலம்
உருவாக்கிய அறை...........வகுப்பறை!


பல தலைவர்களையும்,ஆட்சியாளர்களையும்,
அதிகாரிகளையும் உருவக்கிய அறை !
எந்தவித சலனமும் இல்லாமல்..
ஒவ்வொரு வருடமும் புதிய
தலைமுறையயும், புதிய உலகையும் ,
படைக்க ஆயத்தப்பட்டு கொண்டே இருகிறது.....!

ம.விஷ்ணு,
இளமறிவியல் இரண்டாமாண்டு கணிதம்,
தியாகராசர் கல்லூரி,
139-140காமரசர் சாலை,
மதுரை-625 009.

எழுதியவர் : விஷ்ணு (21-Oct-14, 11:03 pm)
Tanglish : vagupparai
பார்வை : 881

மேலே