ஓவியமானவள் -சந்தோஷ்

உன்னிலிருந்து
உடல்பிரியாத வரத்தோடு
உன் உயிருக்குள்
என் உயிர் தொலைத்து

உன் வலது காலும்
என் வலது காலும்
முன் அடியெடுத்து
உன் இடது கையும்
என் வலது கையும்
பிணைந்துக்கொண்டு
ஓர் இராணுவ அலங்காரத்தின்
நடைபயின்று
ஓர் இரகசிய உடன்பாட்டில்
நம் தோள்கள்
தொட்டு உரசி
மோகத்தில் தீயேற்றி,

உன் உடல் அனலில்
என் மேனி குளிர்காய்ந்து
என் மூச்சுவெப்பத்தில்
உன் கழுத்து காதல்கொண்டு
என் மார்பில்
நீ சாய
உன் தலையில்
என் விரல்கள்
அன்பு ஜாலமிட....
வண்ண வண்ண
ஏக்கத்தோடு
கனவுக்கோட்டையில்
என் காதலை
சிற்பமாய் பதுக்கிவைத்திருக்கிறேன்

வேல்விழியாளே..!
என்மேல் காதல்வெறியேற
காத்திருக்கும்
என் எதிர்கால
இராட்சத காதலியே..!

நீயும் நானும் அன்றி
வேறுயாரும் அரவமற்ற
அந்த
அஜந்தா குகையிலிருக்கும்
ஒவியங்களாய் நீ மாற
ரவிவர்மனாய் நான் மாற
ஒரு வரம் வேண்டி நிற்கிறேன்.

உன்னை தீண்டி தீட்டி
நான் வரைந்திடவும்
என்னை ரசித்து காதலித்து
நீ வாழ்ந்திடவும்
தவமாய் தவமிருக்கிறேன்..!



ஒராண்டு அல்ல
ஈராண்டு அல்ல
நூறாண்டு தாண்டியும்
உனக்காவே
என் உயிர்ப்பாறை
உயிரோடு , கற்போடு காத்திருக்கும்...
உன்னை ஓவியமாய்
என் காதல் உளியால்
செதுக்கிக்கொள்ள..!

என் கற்பனை விழிமியமே..!
என் கனவு சொர்க்கமே.......!
என் ஆன்மாவை
களவாடிய கள்ளியே !
இன்னும் தள்ளியே
ஏன் நிற்கிறாய்...?
வா... வா.. விரைவினில் வா..?

உயிர் ஒவியமே வா..!.
என் அஜந்தாவே வா....!
என் கனவுவாழ்வு முடிவதற்குள்
என் கனவு நாயகியாய் வா..!



-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (22-Oct-14, 12:05 am)
பார்வை : 128

மேலே