என் கனவு
நான் காணும் கனவு பலித்திட வேண்டும்
பலிக்கும் கனவை மட்டும் நான் கண்டிட வேண்டும்
வேண்டும் வரம் யாவும் உடனே நிறைவேறும்
வரம் ஒன்று எனக்கு வேண்டும்
தேன் மழை பொழிய வேண்டும்
தேனியும் செந்தமிழில் பாட வேண்டும்
நத்தை கூட்டில் ஒரு நாள் வாழ்ந்திடும்
வரம் ஒன்று எனக்கு வேண்டும்
பசியே இல்லா குழந்தை வேண்டும்
பாசமாய் உள்ள இயற்கை வேண்டும்
பச்சை புல்லின் மேல் உள்ள பனித்துளியை
மகுடமாய் சூடும் வரம் ஒன்று எனக்கு வேண்டும்
சாதி மதம் ஒழிய வேண்டும்
சமாதானம் செழிக்க வேண்டும்
வேண்டும் வரம் யாவும் உடனே தந்திடும்
இறைவனாகும் வரம் ஒன்று எனக்கு வேண்டும்