ஜன்னல்

அன்று
உலகத்தை நாம் காண
ஜன்னல் வைத்தோம்
இன்று
உலகம் நம் வீட்டை காண
ஜன்னல் வைக்கின்றோம்

தொலை தொடர்பு சாதனங்கள் மூலம்
தொலைவில் உள்ளோரை தொடர்பு கொள்கிறோம்

அண்டை வீட்டாரின் தொடர்பு சாதனமான
ஜன்னல் மூடி கிடக்கின்றோம் - காரணம்
கணினியின் ஜன்னலில் விழுந்து விட்டோம்
இலவச காற்று வரும் ஜன்னலை மூடிவிட்டு
இரவல் காற்று பெறுகிறோம் மின்விசிறியிடம்
அழகு செய்கிறோம் என்ற பெயரில்
ஜன்னலிற்கு ஆயுள் தண்டனை கொடுத்தோம்
நான்கு சர்க்கர வாகனத்தில் கூட
நடுவில் அமர மனம் மறுக்கிறது
ஜன்னல் ஓர இருக்கை அது ஈர்க்கிறது - ஆனால்
நாம் வசிக்கும் இல்லம் அதில்
நாம் சுவாசிக்கும் காற்றுக்கு கூட
அனுமதி இல்லை
இறந்தது ஜன்னல்
நடைபிணமாய் நாம்..!!

எழுதியவர் : கவிதைநேசன் பிரிதிவி (23-Oct-14, 5:13 pm)
Tanglish : jannal
பார்வை : 526

புதிய படைப்புகள்

மேலே