சறுக்குமரம்
எப்படி எப்படி இப்படி?
சிகரம் தொட்டுவிடும் தூரம்தான்
இதோ! இதோ!
தொட்டுவிடத் துடிக்கும் கைகள்
முன்னோக்கி,
அந்தோ!
வழுக்கும் கால்கள்
பின்னோக்கி,
எப்படி எப்படி இப்படி?
சறுக்கல்கள்
சில நேரங்களில் பெரிதாய்
பல நேரங்களில் சிறிதாய்
சிறிதோ! பெரிதோ!
வலி மட்டும் நிச்சயமாய்
மறுபடியும் முயற்சி வலிமையாய்
எட்டுமோ! கிட்டுமோ!
ஏக்கம் இல்லை
அன்றி
பட்டும் படாமலும்
துக்கம் உள்ளே!
தோல்வியின் காரணம்
துலங்கவுமில்லை!
வெற்றியின் வழித்தடம்
விளங்கவுமில்லை!
எதிர்பாரா கணத்தில்
சிகரம் தொட்டன கைகள்
வெற்றியின் விளிம்பில்
விளங்கியது உண்மை!
"தளராத மன" மென்று!