வாழ்க்கை வாழ்வதற்கு

வாழ்க்கை வாழ்வதற்கு .........................,
பூக்களில் கூடுகட்ட..........,
ஷுகள் துடைக்க அல்ல
மேக கூட்டதில்
மின்னல் பிடிக்க
குப்பை கூலங்களில் அல்ல .............,
கற்க கசடற ..................,
எங்கள் வாழ்வோ
நிற்க ஓய்வற ...............,
வேலை செய்யும் வேளைகளில்
சில பட்டாம்பூச்சிகள் பறபதுண்டு
எங்கள் கைகளிலோ எலும்பை
முறிக்கும் சுத்தியல்கள்
புத்தகம் புரட்டி
காய்க்க வேண்டிய கைகள்
கருகி விட்டன
தொழிற்சாலை புகையில்
நாளைய "தீ"கடைகள்
பெயர் மாற்றம் செய்யப்பட்டு
'டீ" கடைகளில் ...........,
வாழ்க்கை வாழ்வதற்கு
எங்கள் வாழ்க்கை
எங்கள் வாழ்கையில்
பிறர் வாழ்வதற்கல்ல ................,
எங்களை கண்டு
தண்ணீர் வடிப்பவர்களே
முடிந்தால்
காஷ்மீரத்து ரோஜாவும்
புல்புல் -ன் சிறகும்
கொண்டு எங்கள்
உதடுகளுக்கு
ஒத்தடம் கொடுங்கள்
அவை சிரிக்க மறந்து
மரத்து விட்டன
ஒரு கையில் குப்பை மூட்டை
ஒரு கையில் காலி பாட்டில்
ஒரு கையில் எச்சி டம்ளர்
ஒரு கையில் சினிமா போஸ்டர்
ஒரு கையில் சொல்லமுடியாத கவலைகள்
எந்த கையும் ஓய்வாக இல்லை
உங்கள் கைகளால்
எங்கள் கண்களில் வடியும்
கண்ணீரை துடைத்து விடுங்கள்
கண்ணீர் சிப்பியில்
சில சிவப்பு முத்துக்களும்
உண்டு ............................,
இ.இப்ராகிம்
எந்திரப் பொறிஇயல் இறுதியாண்டு
செட்டிநாடு பொறிஇயல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
புலியூர் ,கரூர் -11