என் நாடகம்

எனது
கோட்பாடுகளை
தகர்ப்பதே
உனது வேலை...

சிந்திய புன்னைகையில்
சிலிர்க்கும் கண்ணீரை
மறுதலிக்கும் தற்கொலை
எண்ணமாய் உனது பார்வை...

காற்றில்லா வேலிகளில்
கதவடைத்து அமர்ந்து
கண் சிமிட்டும் கோர்வையாக
உனது கவிதை....

உனது பெயரின் உச்சரிப்பில்
உள்ளுக்குள் உருளும்
கூழாங்கற்களின் மொத்தமென
தொட்டு தடவும்
உனது புன்னகை...

தேவதை நீ என
பொய் சொல்வதும், யாரது நீயது
என்று மெய் செய்வதும்
கனவுக்குள் தொலைவதாக
என் நாடகம்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (26-Oct-14, 7:30 pm)
Tanglish : en naadakam
பார்வை : 191

மேலே