பாடல் வனம்
![](https://eluthu.com/images/loading.gif)
மனிதக் கால்கள்
பார்க்காத
மகரந்த காடு...
நீலகிரி மர தைலம்
வாசனை
காற்றின் தழுவலில்
சருகுகள்
கூடவே நீரோசை...
வண்டுகளுக்கும்
வண்ணத்துப் பூச்சிகளுக்கும்
தேனடை வழங்கும்
தெள்ளமுது...
காற்றின் தழுவலில்
சருகுகள்
கூடவே நீரோசை...
மரங்களை
சுற்றிக் கொண்டு
இல்லை இல்லை
பின்னிப்பிணைந்த
மலர்க்கொடிகள்...
வண்ணத்துப் பூச்சிகளின்
ஆகாய நாட்டியத்திற்கு
வண்டுகளின்
ரீங்காரம்...
சுதிக்களையாத
தம்புராவைப்போல்...
அதற்கேப்ப
அருவியில்
துள்ளிப்பாயும்
மீன்குஞ்சுகள்...
இயற்கையின்
இசைக்கு
குருவிகளின்
கீச்... மூச்...
கூடவே பவுர்ணமி நிலா
நட்சத்திர குழுமங்கள்
இலை நுனியில்
பனிக்கூடுகள்...
மூங்கில் மரங்களில்
ஒட்டடை...
அமைதியாய்
ஆலாபனைகள்
சேர்ந்தும்
தனித்தும்...
தூரமாய்
கோட்டான்களின்
கவிதை சப்தம்...
அது ஒரு
அழகிய
பாடல் வனம்...!