இணைப்பு வசதி

மதிநுட்பம்
உள்ளவர்கள்தான் ..
நம் பெற்றோர்கள்..
சந்தோஷப் பட்டுக் கொண்டார்கள்..
சண்டையிட்டுக் கொண்டதன்
மூலம் நம்மை சந்திக்க விடாமல்
தடுத்து
தொலைதூர தேசத்திற்கும்
நம்மை பிரித்து சென்று!
தொழில்நுட்பம் தந்த வரம்..
ஸ்கைப்பும் வைபரும்
நம்மோடு சண்டையிடாத வரை..
தொடருவோம் ..
நம் சந்திப்புகளை!
அறியவில்லை அவர்கள்
நம் இதயங்களின்
தொலைபேசி இணைப்புகள்
துண்டிக்க முடியாதவை..
என்பதை !