காரணம்

என்னை நீ காதலிக்க
ஒரே ஒரு காரணமாவது
சொல் என்றாய்!
மற்றவர்கள் ரோஜாப் பூவை
பார்த்து... இது ரோஜா என்று
சொல்லிப் போவது போல
உன்னை பார்க்கிறார்கள்..
உன் பெயரைக் கொண்டு!
நானோ..
பூவின் அழகு..
வாசம்..நிறம்..
இருக்கும் இடம்..
மகரந்தம் ..
தன்மை..
குணம்..
மேல் படர்ந்திருக்கும்
பனித் துளி.. என
எல்லாம் உள் வாங்கி
என் மன வங்கியில்
சேர்த்து வைக்கிறேன் . .
நிரந்தர வைப்பு தொகையாக !
ஒரு..
பூவையே ...இப்படி பார்ப்பவனை ..
பூவையே ..!
உன்னை எப்படி கொண்டாடுவேன்!
காரணம் இன்னும் வேண்டுமா?