கருவாட்டுக் காதல்

கருவாட்டுக்கும் , அது கிடந்தது தூங்கும் மணல் மேட்டுக்கும் இடையே ஒரு காதல் இருப்பதாய் கற்பனை ..


நானோ மணல் மேடு ,
நீயோ கருவாடு ,
ஒட்டிக்கொள்ளவாடி என்னுள் நீயும் ,
தொட்டுக்கொள்ளவாடி உன்னை நானும் !

மணலெல்லாம் மணம் வீச,
மனதோடு நீ பேச ,
அலைகடலென எழுகிறது நெஞ்சம் - என்னை
அடைகாத்துப் போயேண்டி கொஞ்சம் !

என்னுள்ளே சரிபாதி கலந்து ,
என்னிதயம் போனதடி கவிழ்ந்து ,
உறவாடி போகாதே பிரிந்து ,
உன்னாலே போவேனே இறந்து !

மண்ணாலே மண்ணை ,
புதைத்தாயே என்னை ,
மண்ணாகி போனாலும் ,
மறவேனே உன்னை !

இடைப்பட்ட காலத்தில் ,
இப்படியொரு காதல் ,
இக்கருவாட்டுக் காதலுக்கு ,
யாரிங்கே காவல் !

உன்னை ,
களவாடிச் சென்றார்கள் இன்று ,
பின்,
கறுவாட்டுச் சந்தையில் நின்று ,
கூவி கூவி விற்றார்களே -நம்காதலை
கூறு போட்டு விட்டார்களே !!!

IRFAN...

எழுதியவர் : (27-Oct-14, 12:11 pm)
Tanglish : karuvaattuk kaadhal
பார்வை : 108

மேலே