லிமரைக்கூ - கே-எஸ்-கலை
தூக்கியாச்சு அப்பனுடைய பாடை
திரும்பி வரும் வழியிலேயே - பிள்ளைகள்
கூட்டியாச்சு சொத்துப்பிரிக்க மேடை !
--
பக்தன் கண்களை மூடினான்
கடகடவென ஓதிக் கொண்டே பூசாரி
தட்சிணை எவ்வளவு? தேடினான் !
--
மாசத்திற்கு ஒருமுறையாம் கடாவெட்டு
வாயார மனசார வயிறார சாப்பிடும்போதும்
நெத்தியிலே வச்சிருப்பார் விபூதிப்பொட்டு !
--
மந்திரிக்கு மேடையில விக்கல்
மக்கள் சொத்த திருடி தின்னதால
வந்திருக்கும் சிக்கல் !
--
இலட்ச ரூபா மாத்திரை
குடித்துவிட்டும் கோடீஸ்வரன் போகிறான்
பாவம்! இறுதி யாத்திரை !
---------------------
(யாவும் லிமரைக்கூ வடிவில் எழுதப்பட்டுள்ள பாக்கள் )