என்று மாறுமோ

காட்டில் விறகு பொறுக்க முடியவில்லை
இது எங்க ஸ்டேட் உள்ளே வராதே!

கடலில் மீன் பிடிக்க முடியவில்லை
இது எங்க பாடர் உள்ளே வராதே!

இங்கு தயாராகும் மின்சாரம் எங்களுக்கில்லை
இது தேசிய சொத்து உரிமை கேட்காதே !

ஓடி வரும் தண்ணீர் எங்களுக்கில்லை
இது எங்கள் நதி பங்கு கேட்காதே!

ஐயோ தமிழா !
என்று இவையெல்லாம்
நம் வசமாகும் ?

என்று நம் தலைவர்கள்
ஓரணியில் திரள்வர் ?

எழுதியவர் : கசி கரோ (27-Oct-14, 8:42 pm)
Tanglish : enru maarumo
பார்வை : 324

மேலே