நம் சொத்து -நம் திறமைகளே

சின்னச்சிறு வயதினிலே -கவி
புனைய ஆசை கொண்டேன்!

கவிக்கு சில சொற்கள் கிடைத்தன
சொல்லமைப்பு இல்லாமல்

சொல்லமைப்பை உருவாக்க முயலும்
முன்பே சொற்கள் மறந்து போயின!

எழுதிவைத்து அமைத்துப் பார்த்தால்
அடிகள் கொஞ்சம் பிறழ்ந்தன!

பிறழ்ந்த வற்றைப் பின்தள்ளி
புதியவற்றை தேடலாயினேன் !- ஆம்

என் தேடலுக்கு முடிவு உண்டு -ஆனால்
என் திறமைக்கு முடிவில்லை !-ஏனெனில்

என் சொத்தான முத்து
என் திறமைகளே !

தேவைக்கேற்ப அவற்றைப்
பயன்படுத்துவது நன்று!

தேவைகள் இருந்தும்
பயன்படுத்தாமல் இருப்பது
நன்றன்று!

சொத்தான திறமையை
சொத்தையாக்கி போடாமல்

முடியும் வரை அதை
முயன்றுப் பார்ப்போம் !

சத்தில்லாதவன் சோர்ந்து போகலாம்-கையில்
சொத்துள்ளவன் சோர்ந்து போகலாமா?

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (27-Oct-14, 7:48 pm)
பார்வை : 223

மேலே