நா இருக்கேன்ல

பேரன்; தாத்தா ! ஐயோ !அது பேஸ்ட் இல்ல... அப்பாவோட saving கிரீம் ..
தாத்தா ; அதான் எரியுதா? முன்னமே சொல்லக் கூடாதா?

பேரன்; தாத்தா அது துணிக்கு போடற சோப் ...அத போட்டுக் குளிக்கிறீங்க?
தாத்தா; எல்லாம் வெள்ளையா இருந்துச்சா அதான் தெரில?

பேரன்;தாத்தா! பேப்பரை தலைகீழா படிக்கிறீங்க
தாத்தா; கண்ணு தெரில காதும் கேக்கல அதான்

பேரன்; தாத்தா !அது கோலமாவு ....
தாத்தா; விபூதின்னு நினைச்சேன் சரிப்பா

பேரன்;தாத்தா ஊருக்குப் போகும் போது கவனமா போங்க ...
தாத்தா; சரிப்பா
பேரன்; தாத்தா !அது சென்னை ட்ரைன் ..கும்பகோணம் ட்ரைன் இல்ல
சரி தாத்தா நீங்க ஊருக்கெல்லாம் போக வேண்டாம் ..
தாத்தா; பாட்டி இருந்தா எனக்கு இப்டியெல்லாம் நடக்குமா?
பேரன்; அழுவாதிங்க ..தாத்தா நா இருக்கேன்ல ...நீங்க என் கூடவே இருங்க ...
தாத்தா கண்களில் கண்ணீர் பெருகியது...

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (28-Oct-14, 9:13 am)
பார்வை : 312

மேலே