ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
என் கணவன் தரம்கெட்டவனாம்..
மதிலால்..
எட்டியெட்டி தலையை நீட்டுகிறார்கள்
கள்ளநோட்டு அடித்ததைக் காட்டிக்காட்டி..
ம்ம்ம்ம்...
எண்ணும்...
எழுத்தும் அச்சும் உண்மைதான் சொல்கிறது
அச்சோட்டாய்...
நான் என்ன செய்ய..
குறை..குறைதான்
குமரன்கூட..
குறத்தியைத் தேடித்தானே சென்றான்
உள்ளே முள்ளு தராசுக்கு
இருந்தாலும் ..
தூக்கிப்பிடித்துக் காட்டி..
சரிசமனாக்கி...
நீதியை நிலைநாட்டி
என்னில்பாதியை பல்லக்கில் ஏற்றிவிட்டேன்
கைபிடித்துக் கொடுக்கும்போது.. செய்த சத்தியத்துக்காக..
நீ...
நீ...
ஏன் மறந்தாய்
அந்த அக்கினிசாட்சியாய் கொடுத்த வாக்குறுதியை
இதே..
இதை நான் செய்தால்...?
ம்ம்ம்ம்ம்...
விழுந்து வா...!
எப்போதுமே அங்கே நான் இருப்பேன்
சீ.......என்று தள்ளிவைக்க முடியாமல்...
எழுந்துநில் என்று சொல்லும் உன் தாயாக..!!