ஏழ்மை
ஏழ்மை!!!
ஒரு சிறுமியாய்
மழையில் நனைவதில்
எத்தனை ஆனந்தம்???
நீண்ட நாட்களுக்கு பிறகு
தூறல் ஆரம்பித்தது...
நனைந்தேன் நான்!!!
நனைந்தேன் நான்!!!
ஆம்!!! அன்னையின் அர்ச்சனைகளில்
மனக் கவலையுடன் வீட்டினுள் நுழைந்தேன்...
சிறிது நேரத்தில் நான் மிக ஆனந்தம் அடைந்தேன்
ஆனால் என் ஏழைத் தாயின் முகத்தில் கவலை ரேகைகள்
என்ன ஆச்சர்யம்!!!
வீட்டுக்குள்ளே மழைத் துளிகள்!!!
கூரையின் இடுக்குகளில்
மீண்டும் நனைந்தேன் நான்....
எழுதியவர்
Suriya Amalraj