மழலை வாழ்வு

பல நிறங்களில்
மலர் மாலை
பலா இலையில்
தொப்பி
ஒட்டுப்போட்ட பாவாடை
பாதி கிழிந்த மேல்சட்டை
என்ன சொல்ல நான் தானே
குட்டி மாளிகை இளவரசி
அவரவர் வீடுகளில்
அள்ளிவந்த அரிசி
அடுத்த வீட்டு அக்காளிடம்
எடுத்து வந்த நெருப்பு
வேப்பம் மரத்தடியில்
கூட்டன்சோறு
அன்று
விரும்பி உண்டோம்
ராஜபோசனமாக ....!!
இன்றும் மனதை
வருடிச்செல்லும் என்
மழலை வாழ்வு....